வருமான வரி செலுத்துவோருக்கான வரி விலக்குச் சலுகை (Deduction),ஆண்டுக்கு ரூ.4,44,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை
தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், பல்வேறு வரி விலக்குச் சலுகைகளை
அறிவித்தார். அதன்படி, வருமான வரி செலுத்துவோர் ஆண்டுக்கு மருத்துவக்
காப்பீட்டுக்காகச் செலுத்தும் தொகையில் ரூ.10,000 வரை வரிச் சலுகை
உயர்த்தப்படுகிறது.
போக்குவரத்துப் படிக்கான வரி விலக்கு ஆண்டுக்கு ரூ.19,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வருமான
வரிச் சட்டத்தின் 80 சிசிடி பிரிவின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தின்
கீழ் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு ரூ.50,000 வரை கூடுதலாக வருமான வரிச்
சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதிக் கடன் வட்டி தொடர்பான வரிச் சலுகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது ரூ.2 லட்சமாகத் தொடர்கிறது.
நிறுவனங்களாகும்
துறைமுகங்கள்: அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை நிறுவனங்களாக
மாற்றும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்படும் என்று அருண் ஜேட்லி
தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
துறைமுகங்களும் முதலீடுகளை ஈர்க்க வேண்டியுள்ளது. அதேபோல் அவை தங்களிடம்
உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றைச்
சாதிப்பதற்காக பொதுத்துறையில் உள்ள துறைமுகங்கள் நிறுவனங்களாக மாறுவதற்கு
ஊக்கமளிக்கப்படும் என்றார் ஜேட்லி.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த
அறிவிப்பு: இதனிடையே, துறைமுகங்களை நிறுவனங்களாக மாற்றும் அரசின் முடிவைக்
கண்டித்து மார்ச் 9ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை
துறைமுகத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் 12 பெரிய
துறைமுகங்கள் உள்ளன. கண்ட்லா, மும்பை, ஜவாஹர்லால் நேரு துறைமுகம்,
மர்முகாவ், புதிய மங்களூரு, கொச்சி, சென்னை, எண்ணூர், வ.உ.சிதரம்பரனார்
(தூத்துக்குடி), விசாகப்பட்டினம், பாராதீப், கொல்கத்தா ஆகியவையே அவை.