உயர்கல்வி படிப்போர் தமிழ்நாட்டில்தான் அதிகம்
சென்னை
பல்கலைக்கழகத்திலும், அதன் அங்கீகாரம் பெற்ற அனைத்து கலை அறிவியல்
கல்லூரிகளிலும் வருடந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை
வரவேற்கிறோம். அதனால் மாணவர்கள் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது என்பது உறுதியாகிறது. இந்தியாவில் உயர்கல்வி கற்போர்
சதவீதத்தை விட தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்போர் சதவீதம் அதிகம்.
சென்னை
பல்கலைக்கழகம் பழமையான பல்கலைக்கழகம் சில கல்லூரிகள் கல்வித்தரத்தை
வலியுறுத்தும் ‘நாக்’ (நேஷனல் அசெஸ்மெண்ட் அண்ட் அக்ரிடேசன் கவுன்சில்)
சான்றிதழ் பெறவில்லை. அந்த கல்லூரிகளையும் நாக் அங்கீகாரத்திற்காக ‘நாக்’
கமிட்டிக்கு விண்ணப்பிக்க சொல்லி இருக்கிறோம். மாணவர்களின் வளர்ச்சிக்காக
பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தற்கொலையை தடுக்க ஆலோசனை மையம்
மாணவர்களுக்கான
‘எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்வி மற்றும் ஆலோசனை மையம்’ சென்னை பல்
கலைக்கழகத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையம் மாணவர்கள் எத்தகைய
கல்விக்கான முதுகலை பட்டப்படிப்பை அல்லது ஆராய்ச்சி படிப்பை படித்தால்
அவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்கள் தாங்கள் கற்றதை நேர்முகத்தேர்வில்
சரியான முறையில் விவரிக்க வைத்தல், நாட்டுப்பற்றை வளர்த்தல், வேலைவாய்ப்பை
அதிகரித்தல், வேலை கிடைக் காமல் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்ட
மாணவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கிஅவர்களின் தற்கொலையை தடுத்தல் ஆகிய
செயல்பாட்டில் ஈடுபட உள்ளது. இந்த மையம் அமைக்க ரூ.4லு கோடி செலவாகும். இதை
திட்டமாக தீட்டி பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அனுப்பி உள்ளோம்.
திட்டம் அனுமதி வந்ததும் மையம் தொடங்கப்படும்.
ரூ.10 கோடியில் 4 துறைகள்
புவி
அறிவியல், உயிரி இயற்பியல் உள்ளிட்ட 4 துறைகள் ரூ.10 கோடியில் சென்னை
பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான அனுமதி அரசிடம் பெற உள்ளோம்.
அனுமதி பெற்ற பின்னர் இந்த துறைகள் தொடங்கப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.