எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை விழுப்புரம்
மாவட்டத்தில் 52 ஆயிரத்து 998 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு நடந்த
மையங்களை கலெக்டர் சம்பத் பார்வையிட்டார்.
எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தமிழ் முதல் தாள் தேர்வுடன் தொடங் கியது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 162 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து 279 மாணவர்களும், 25 ஆயிரத்து 823 மாணவிகள் , தனித்தேர் வர்கள் 896 பேர் என மொத்தம் 52 ஆயிரத்து 998 மாணவ, மாணவிகள் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர்.
தேர்வுகள் ஆண்டுதோறும் காலை 10 மணிக்கு தொடங்கி 12.45 மணிக்கு முடிவடையும்.
ஆனால் கடந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்ததின் காரணமாக மாணவ,
மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு 45 நிமிடத்திற்கு முன்பாகவே தேர்வுகளை
தொடங்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி இந்த முறையும் கடந்த
ஆண்டு பின்பற்றப்பட்ட மாதிரியே காலை 9.15 மணிக்கு தேர்வுகள் தொடங் கியது.
இதற்காக மாணவ, மாணவிகள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து இறைவனை வணங்கி பெற்
றோர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கி தேர்வு மையத் திற்கு வரத்தொடங்கினர்.எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தமிழ் முதல் தாள் தேர்வுடன் தொடங் கியது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 162 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து 279 மாணவர்களும், 25 ஆயிரத்து 823 மாணவிகள் , தனித்தேர் வர்கள் 896 பேர் என மொத்தம் 52 ஆயிரத்து 998 மாணவ, மாணவிகள் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர்.
ஆர்வமுடன் தேர்வு எழுதினர்
சரியாக காலை 9.15 மணிக்கு மாணவ, மாணவி களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. என் னென்ன கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன என்பதை படித்து பார்ப்பதற்காக கூடுதலாக 15 நிமிடம் ஒதுக் கப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டவுடன் மாணவ, மாணவிகள் ஆர்வ முடனும் மகிழ்ச்சியுடனும் அதே நேரத்தில் விரைவாகவும் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணிக்கு முடிவடைந்தது.
பறக்கும் படைகள்
தேர்வில் எவ்வித முறை கேடும் நடைபெறாமல் தடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், அனை வருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், கற்கும் பாரதம் திட்ட மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படை குழுக்களும், மேலும் சப்-கலெக்டர் , வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ள பறக்கும் படை குழுக்களும், தேர்வு மையங் களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இத்தேர்வு பணியில் அறை கண்காணிப்பாளர்கள் 2,400 பேரும், விடைத்தாள் கட்டு காப்பாளர்கள் 28 பேரும், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் 152 பேரும், துறை அலுவலர்கள் 152 பேரும், பறக்கும் படை உறுப்பினர்கள் 323 பேர் உள்பட மொத்தம் 3,177 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கலெக்டர் சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகம், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.







