மத்திய அரசின் பாதுகாப்பு
ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தால் (டி.ஆர்.டி.ஓ.) தயாரிக்கப்பட்ட
"அஸ்த்ரா' ஏவுகணை, வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஒடிஸா மாநிலம், பாலசோர் ஏவுதளத்துக்கு அருகேயுள்ள
சண்டிப்பூரில் இந்தச் சோதனை நடைபெற்றது. சுகோய்-30 ரக விமானத்தில் இருந்து
ஏவப்பட்ட "அஸ்த்ரா' ஏவுகணை, அதன் இலக்கான ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக
தகர்த்தது.
வானிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் வகையிலான
அந்த ஏவுகணையின் முகப்புப் பகுதியில் தொலைத்தொடர்பு இயந்திரம் ஒன்றும்
இணைக்கப்பட்டிருந்தது. முன்னதாக அஸ்த்ரா ஏவுகணையை வைத்து கடந்த
புதன்கிழமையும் சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து, அஸ்த்ரா ஏவுகணையின்
திட்ட இயக்குநர் வேணுகோபால் கூறுகையில், "சக்திவாய்ந்த ஆயுதம் என்பதை
அஸ்த்ரா நிரூபித்துள்ளது' என்றார்.








