மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பகவத் கீதையைக் கற்றுத்தரத் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மும்பை மாநகராட்சி துணை ஆணையர் ராம்தாஸ் பாவுசாகேப் இதுகுறித்து பேசியதாவது:
மும்பை மாநகராட்சியின் கீழ் உள்ள 1,200 பள்ளிகளில்
4,78,000 மாணவர்கள் பயில்கின்றனர். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக
ஆண்டுக்கு ரூ.3,2000 கோடி செலவிடப்படுகிறது.
மாணவர்களிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கவும், ஆன்மிகம்
சார்ந்த அறிவை மேம்படுத்தவும், அவர்களுக்கு பகவத் கீதை வகுப்புகள் நடத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த ராதா
கோபிநாத் பேசுகையில், "தொலைக்காட்சி, திரைப்படங்கள், இணையதளங்கள் ஆகியவை
குழந்தைகள் மனதில் எதிர்மறை சிந்தனைகளை வளர்க்கின்றன. அவற்றிலிருந்து
குழந்தைகளைக் மீட்க வேண்டும்' என்றார்.








