அனைத்து ஆசிரியர் தோழமைகளுக்கும் கல்விகுரலின் வணக்கங்கள்.
இழந்த நம் உரிமைகளை வென்றெடுப்போம் மறுபடியும் ஒன்றினைவோம்.அன்பு சால் ஆசிரியர் தோழமைகளே வரும் மார்ச் 8 அன்று நடைபெறும் ஆசிரியர்களின் மாபெரும் போராட்டத்தை வலுப்பெற செய்யும் வகையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்து ஆசிரியர் ஆயத்த கூட்டம் இன்று ஆங்காங்கே நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு ஆயத்த பணிகளை மேற்கொண்டு வரும் மார்ச் 8 அன்று தமிழக ஆசிரியர்கள் யார் என்று உலகறிய செய்வோம்.
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தை சார்ந்த அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மதியம் 03:00 மணியளவில் கள்ளக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தரும்படி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது !
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் !