மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியம் மூலம் உதவி ஆய்வாளர் பணியிடத் தேர்வுக்கான
இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மார்ச் 25-ம் தேதி முதல் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி
வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து விதமான போட்டித்
தேர்வுகளுக்கும், இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள், தகுதி வாய்ந்த
வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சீருடைத் தேர்வு வாரியம், சென்னை அண்மையில்
அறிவிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் மே 23-ம் தேதி
நடைபெற உள்ளது.
இதற்கான, இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள், தகுதி
வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு மார்ச் 25 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் நடத்தபடவுள்ளது.
இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய
விரும்பும் இளைஞர்கள், தாங்கள் இத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளமைக்கான
ஆதாரத்துடன், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்
நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.








