கண்காட்சியை துவக்கி வைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலன், அங்கு
அமைக்கப்பட்டிருந்த கல்லூரிகளின் ஸ்டால்களுக்கு சென்று, அக்கல்லூரியின்
சிறப்புகள் மற்றும் படிப்புகள், மாணவர்களுக்கு கல்லூரிகள் செய்து
கொடுக்கும் வசதிகள், கல்வி முறை உள்பட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார்.
பின்னர் அவர், தினகரன் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலுக்கு சென்று
பார்வையிட்டு, அங்கு சூரியன் பதிப்பகத்தில் இருந்து வெளியிடப்பட்டிருந்த
புத்தகங்களை பார்த்து சமூக சிந்தனையுடன் வெளியாகியுள்ள புத்தகங்கள் என்று
பாராட்டினார். கண்காட்சி குறித்து நீதிபதி தனபாலன் கூறியதாவது: உலக
மயமாக்கலால் கல்வி ஒரு நாட்டின் முன்னேற்றமாக அமைந்துள்ளது. தினகரன்
மற்றும் டாக்டர் எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும்
இந்த மாபெரும் கல்வி கண்காட்சியை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன்.
ஒரு
காலத்தில் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளை நோக்கி சென்றனர்.
தற்போது நமது நாட்டில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. பல்வேறு கல்வி
நிறுவனங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. நமது
நாட்டில் உயர் கல்விக்கு தமிழகம்தான் வழிகாட்டியாக உள்ளது. குறிப்பாக,
கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பு அளிக்கும் வகையில்
கிராமங்களிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி ஏற்படுத்தி மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும் வகையில்
தினகரன் நாளிதழும், டாக்டர் எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் ஒரு
வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நீதிபதியாக மட்டுமல்லாமல், கல்வியாளன்
என்ற முறையில் இருவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கல்வி கண்காட்சி எல்லா மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும் என
மனதார வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார்: எங்கள் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒரே இடத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. மாணவர்களின் ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் எங்கள் பல்கலைக்கழகம் வாய்ப்பு அளிக்கிறது. பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்பு வைத்துள்ளோம். எங்கள் மாணவர்களுக்கு இந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் பயிற்சி அளித்து அவர்களை ஆராய்ச்சி வல்லுநர்களாக மாற்றுகிறோம். இந்தியாவின் எதிர்கால மாணவர்களை உருவாக்க எங்கள் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளிக்கிறது.
தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் வி.பி.ராமமூர்த்தி மற்றும் தனலட்சுமி: அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளேன். தற்போது மாணவர்கள் பொறியியல் படிப்பில் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக கல்லூரி ஆரம்பித்துள்ளோம். எங்கள் கல்லூரியில் ஆராய்ச்சி படிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். எங்கள் கல்லூரியில் படிக்கும் 90 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கிறது. மாணவர்களுக்கு அனைத்து வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. உயர்தர வகுப்புகள், சிறந்த பேராசிரியர்கள் உள்ளனர். இந்த தினகரன் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி இயக்குனர் வெங்கடேஷ் ராஜா: மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் எந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தை போக்குவதற்காகவும், சிறந்த கல்லூரியை தேர்வு செய்யவும் ஏற்ற வகையில் தினகரன் நாளிதழ் கல்வி கண்காட்சியை நடத்துகிறது. இதற்காக தினகரன் நாளிதழுக்கு நன்றி. எங்கள் கல்லூரியில் 13 துறைகள் உள்ளன. இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகள் உள்ளன. 4 துறைகளில் பிஎச்டி வழங்கப்படுகிறது. அதேபோல் நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. பிரிட்டீஷ் இங்கிலிஷ் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கிறது. ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி முதல்வர் நலங்கிள்ளி: ஆண்டுதோறும் தினகரன் நடத்தி வரும் இந்த கல்வி கண்காட்சியில் நாங்கள் பங்கேற்கிறோம். எங்களுக்கு இதனால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு, இதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் கல்லூரி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற கல்லூரி. பிஇ, பிடெக், எம்.இ படிப்புகளை 22 ஆண்டுக்கு மேலாக வழங்கி வருகிறோம். மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு முதல் ஆண்டில் இருந்தே பயிற்சி அளிக்கிறோம்.
80 சதவீத மாணவர்கள் இறுதியாண்டு கல்வி முடிப்பதற்குள் வேலைவாய்ப்பு பெற்றுவிடுகின்றனர். தமிழ் வழிக்கல்வி மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்குகிறோம். 180க்கு மேல் கட்ஆப் பெறும் மாணவர்களுக்கு எங்கள் கல்லூரியில் டியூசன் பீஸ் கிடையாது. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம்: தினகரன் நாளிதழ் கல்வி கண்காட்சி நடத்தி மாணவர்களுக்கு கல்வி சேவை செய்து வருகிறது. பல்வேறு கல்வி வாய்ப்புகள் ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 முடிக்கும்போது மாணவர்கள் எடுக்கும் முடிவு மிக முக்கியமானது. உங்கள் முடிவு உங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையும். எனவே உங்கள் குழப்பங்களை தீர்க்கும் வகையில் கண்காட்சியில் பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களுடன் எங்கள் கல்லூரி தொடர்பு வைத்து மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கிறோம். சிறந்த பேராசிரியர்கள் மற்றும் தரமான கல்லூரி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.