எழுதுபொருள்-அச்சுத் துறையில் உதவி பணி மேலாளர் பதவிக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
வெ.சோபனா வெளியிட்ட அறிவிப்பு:
எழுதுபொருள்-அச்சுத் துறையில் உதவி பணி மேலாளர்
பதவிக்கான 8 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 1-
ஆம் தேதிய கணினி வழியே நடத்தப்பட்டது. அதில் 432 பேர் பங்கேற்றனர்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள
தகுதிகள்-விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியும் வகையில் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு 36 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவரங்கள்
தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை
பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும்
15- ஆம் தேதியன்று சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.
விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்
நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும். குறிப்பிட்ட நாளில்
உரிய அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்
என்று தனது அறிவிப்பில் சோபனா தெரிவித்துள்ளார்.








