Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பார்வையற்றோர் சராசரி மனிதர்களே அல்ல என்று பதில் மனு: பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் வழக்கு முடித்து வைப்பு:
பார்வையற்றோர் சராசரி மனிதர்களே அல்ல என்று பதில் மனு: பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் வழக்கு முடித்து வைப்பு:
பார்வையற்றோர் குறித்து பதில் மனுவில் கூறிய கருத்துக்காக சென்னை
ஐகோர்ட்டில் பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற
மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, விரிவுரையாளர் பணி தொடர்பான
வழக்கை முடித்து வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு
பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
விரிவுரையாளர் பணி
ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்
மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம் ஆண்டு ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர்
பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்க
குறிப்பேட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சமூக நலத்துறை
கடந்த 1981–ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, அரசு பணியில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இந்த
அரசாணைக்கு எதிராக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமாகும். எனவே விரிவுரையாளர் பணிக்கான இந்த அறிவிப்பை ரத்து
செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சராசரி மனிதர்கள்
இந்த வழக்கில் தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா தாக்கல்
செய்துள்ள பதில் மனுவில், ‘1 முதல் 5–ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும்
ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய விரிவுரையாளர், உடலை அசைத்து
முகபாவனையுடன் பாடம் நடத்தவேண்டும். மேலும், களப்பயிற்சிக்கும் மாணவர்களை
அழைத்துச் செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் சராசரியான நபர்களால்தான் செய்ய
முடியும் என்பதால், பார்வையற்றோர், காதுகேளாதவர் ஆகியோருக்கு வாய்ப்பு
வழங்க முடியாது’ என்று கூறப்பட்டு இருந்தது.
சபீதாவுக்கு கண்டனம்
இந்த பதில் மனுவை கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்
கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் ‘பார்வையற்றோர் சராசரி மனிதரே
கிடையாது என்று அரசு தரப்பு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு
சார்பில் இப்படியொரு பதில் மனுவை தாக்கல் செய்த பள்ளி கல்வித்துறை செயலர்
சபீதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பிரச்சினையை
இப்படியே எங்களால் விட்டுவிட முடியாது. இடஒதுக்கீட்டின் கீழ்
பார்வையற்றோருக்கு வழங்கவேண்டிய பணியிடங்கள் எத்தனை? அதில் எத்தனை இடங்கள்
இதுவரை நிரப்பப்பட்டுள்ளது? எத்தனை இடங்கள் காலியாக உள்ளது? என்பது
உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா
நேரில் ஆஜராகி வருகிற ஏப்ரல் 1–ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’
என்று கடந்தவாரம் உத்தரவிட்டனர்.
பதில் மனு
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும்
விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா நேரில்
ஆஜராகி, ‘நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பதில் மனு தாக்கல்
செய்தார். மேலும், அந்த பதில் மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கு
வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ள விவரங்களையும் கூறியிருந்தார்.
பின்னர்,
அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி எழுந்து, ‘பதில் மனுவில் தவறுதலாக சில
வரிகள் இடம் பெற்று விட்டது. அதற்காக அவர் (சபீதா) நிபந்தனையற்ற மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறார்’ என்றார்.
மன்னிப்பு
அதற்கு தலைமை நீதிபதி, ‘மிகப்பெரிய அரசு பதவியில் இருக்கும் இவர்,
தவறு நடந்துவிட்டது என்று கூறலாமா? அவர் உயர்ந்த பதவியில் உள்ளார். அவர்
இப்படி சொல்லக்கூடாது. பொதுவாக இவர் மட்டுமல்லாமல் பல உயர் அதிகாரிகள்
விதிமுறைகள் என்றால் அதை பின்பற்றுவது இல்லை. விதிமுறைகளுக்கு எதிராகத்தான்
செயல்படுகின்றனர்’ என்று கருத்து தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள்
பிறப்பித்த உத்தரவில், ‘சபீதா நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு
கோரியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்குரிய இடத்தை நிரப்ப நடவடிக்கை
எடுப்பதாகவும் தன் பதில் மனுவில் கூறியுள்ளதால், வழக்கை முடித்து
வைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








