Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
வாட்ஸ்–அப் மூலம் வினாத்தாள் அனுப்பட்ட பிரச்சினை: இனி வரும் காலங்களில் முறைகேடுகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை:
வாட்ஸ்–அப் மூலம் வினாத்தாள் அனுப்பட்ட பிரச்சினை: இனி வரும் காலங்களில் முறைகேடுகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை:
வாட்ஸ்–அப்‘ மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்ட பிரச்சினையில் இனிவரும்
காலங்களில் முறைகேடுகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள
அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக
சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார்.‘வாட்ஸ் அப்’ ஏற்படுத்திய பரபரப்பு
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், ஓசூர் தனியார் பள்ளியில்
‘வாட்ஸ் அப்’ மூலம் வினாத்தாள் வெளியானது சம்பந்தமாக கவனஈர்ப்பை
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். அப்போது நடந்த விவாதம்
வருமாறு:–
செங்குட்டுவன் (தி.மு.க.):–ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில்
கண்காணிப்பாளர்கள் ‘வாட்ஸ் அப்’ செல்போன் மூலம் வினாத்தாள் வெளியாகி
உள்ளது. இது போன்ற முறைக்கேட்டால், தேர்வு எழுதிய மற்ற மாணவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்ற பயம் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. எனவே
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
டில்லிபாபு
(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):–இந்த சம்பவம் ஏதோ ஒரு பள்ளியில் நடந்து
இருக்கிறது என்று கருதாமல், உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு):–இந்த முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல்
பிரின்ஸ் (காங்.), ஜவஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர்
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம்
அளித்து பேசியதாவது:–
4 பேர் கைது
ஓசூரில், தேர்வு மையத்தில் 323 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த
மையத்தில் ஓசூர் விஜய் வித்யாலயா மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள்
கோவிந்தன், மகேந்திரன் ஆகியோர் கண்காணிப்பாளராக இருந்தனர். இவர்கள் தங்களது
செல்போன் மூலம் வினாத்தாளை அனுப்பியது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் ஆசிரியர்கள் கார்த்திகேயன்,
உதயகுமார் ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும்
கைது செய்யப்பட்டனர். மேலும் 4 தேர்வு மையங்களுக்கு வேறு மாவட்டத்தை
சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஓசூர் கல்வி மாவட்ட
அலுவலர் வேதக்கண் தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் மாது, ஓசூர் மாவட்ட கல்வி
இளநிலை உதவியாளர் ரமணராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலக இருக்கை
கண்காணிப்பாளர் சந்திரசேகரன், கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலக உதவியாளர்
அசோக்குமார் ஆகிய 5 பேர் மீது துறை ரீதி நடவடிக்கையாக, தற்காலிக பணி
நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றறிக்கை
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு,
விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட செல்போன் ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல்
தடுக்க அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து கல்வி
அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விதமான
முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








