மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுயவேலைவாய்ப்புக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.
இதுகுறித்து அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: மதுரை காமராசர் பல்கலைக்கழக, வயது வந்தோர் தொடர்கல்வி,
விரிவாக்கப்பணித்துறையில் படித்த வேலைவாய்ப்பற்ற மாணவ, மாணவிகளுக்கு சுய
வேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சிக்கான சேர்க்கை மே 6 முதல் தொடங்க உள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேறியவர்கள் (அ) தவறியவர்களுக்கு
"ரெஃப்ரிஜிரேசன்-ஏர் கண்டிசனிங்', "எலக்ட்ரீசியன்', "எலக்ட்ரிகல் -
எலக்ட்ரானிக்ஸ்' உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஓராண்டுக்கான செய்முறை பயிற்சிகள்
அளிக்கபட உள்ளது.
இதன்மூலம், சுய தொழில் தொடங்குவதற்கும், தொழில்நுட்பப்
பணியில் சேரவும், வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. மேலும்,
பயிற்சி தொடர்பான தகவலுக்கு 0452-2537838 என்ற தொலைபேசி எண்ணிலும்,
விண்ணப்பப் படிவங்களைப் பெற மதுரை காமராசர் பல்கலைகழக அலுவலகத்தை நேரிலும்
அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








