இந்திய விமான நிறுவனத்தில்
ஏற்பட்டுள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,800
தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து மாநில
பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பார்மசிஸ்ட்டாக ஒரு வருட
பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின்
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மூன்று ஆண்டு
ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பணியின்
திறன் பொறுத்து மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Air India Limited
என்ற பெயரில் Delhi-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Office of General Manager (Personnel),
Air India Limited, Northern Region,
Admin. Building, Opposite Post Office,
IGI Airport, Terminal-1, New Delhi-110037.
Air India Limited, Northern Region,
Admin. Building, Opposite Post Office,
IGI Airport, Terminal-1, New Delhi-110037.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.airindia.in/writereaddata/Portal/career/195_1_Pharmacist_and_clerk_of_works.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.