ஓர் ஆண்டு படித்து ஒப்பற்ற சாதனை!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம்.2014-2015ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளியில் இருந்து 49மாணவர்கள் தேர்வு எழுதினர்,இவர்களில் 49 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.மற்றும் முதல் மதிப்பெண் 490 மதிப்பெண்களை எஸ்.சிவக்குமார் என்ற மாணவன் பெற்றுள்ளான்.இவன் தமிழ்-96,ஆங்கிலம்-94,கணிதம்-100,அறிவியல்-100,சமூகவியல்-100 மொத்தம் 490.மேலும் இப்பள்ளியில் 2மாணவர்கள் கணிதத்தில் 100 மதிப்பெண்களும் 12மாணவர்கள் அறிவியலில் 100மதிப்பெண்களும்,சமூகவியலில் 4மாணவர்கள் 100மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.18மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த சாதனையை பாராட்டி தலைமை ஆசிரியர் ,மற்றும் ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மார்ஸ் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி கோ.தனமணி அவர்கள் பாராட்டி கேடயங்களை வழங்கினார்கள்.மற்றும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.அரசுப் பள்ளியில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம் ஆனால் இனி இது சாத்தியம்.அரசு பள்ளி ஆசிரியர்கள் என்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுஅதை மெய்பிக்கும் வகையில் உள்ளது.இப் பள்ளி தொடந்து 100%தேர்ச்சி பெற கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.







