ஜூலை 1-தேதி முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடி
உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹெல்மட் அணியாவிட்டால் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்
செய்யப்படும் என்றும்,புதிய ஹெல்மட் ரசீதை காண்பித்தால் மட்டுமே ஓட்டுநர்
உரிமம் திரும்பி வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களில் தேவையற்ற உயிரிழப்புக்களைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
அதனடிப்படையில், அதே ஆண்டின் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தமிழகத்தில் இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

அதன் பின் 100 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை தமிழகத்தில் அந்த ஆணை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
தலைக்கவசத்தை கட்டாயமாக்கும் ஆணையை உறுதியாக செயல்படுத்தும்படி அவ்வபோது காவல்துறையினரை அரசு கேட்டுக் கொள்வதும், அடுத்த சில வாரங்களுக்குப் பின் இந்த ஆணை கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 8-தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. இது சம்பந்தமான முந்தைய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்றும், ஹெல்மட் அணியாவிட்டால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இது குறித்த ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.