தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக்
கலந்தாய்வு இம்மாதம் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வில்
பங்கேற்க 5,000 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருவதாக
மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் உஷா சதாசிவம்
தெரிவித்தார். மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள
செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்படுகிறது.
கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள்,
கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்-ஆஃப் மதிப்பெண், ரேங்க்
எண் அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும்
அவர் கூறினார்.
ஜூன் 19 முதல்...: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்.
படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு, சென்னை வாலாஜா சாலையில் உள்ள
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் வரும் 19-ஆம் தேதி
தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழையும் கலந்தாய்வு உண்டு)
தொடர்ந்து நடைபெற உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுப் பிரிவினர் உள்ளிட்ட பிற சமுதாயப் பிரிவினருக்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை ஒரு வார காலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
எவ்வளவு இடங்கள்?: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 551 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கல்விக் கட்டணம்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கல்விக் கட்டணம் ரூ. 4,000 உள்பட ஆண்டுக்கு மொத்தம் ரூ. 13,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பி.டி.எஸ். படிப்புக்கு கல்விக் கட்டணம் ரூ. 2,000 உள்பட ஆண்டுக்கு மொத்தம் ரூ. 11,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வர வேண்டும்: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக கலந்தாய்வு அரங்குக்கு வருவது அவசியம். மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அதற்குரிய சான்றிதழை எடுத்துவர வேண்டும்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெறும் மாணவர்கள் செலுத்தும் ரூ. 25,000 டெபாசிட் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது.
கட்டணம் செலுத்துதல்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் சேர்க்கைக் கடிதம் பெற்றவுடன், கலந்தாய்வு பரிசீலனைக் கட்டணம் ரூ. 500, ஆண்டுக் கட்டணம் ரூ. 13,600 ஆகியவற்றுக்கு தனித் தனியே வரைவுக் காசோலைகளை கலந்தாய்வு அரங்கில் அமைக்கப்படும் வங்கி கவுன்டரில் அளிக்க வேண்டும்.
இணையதளத்தில் அட்டவணை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வு அட்டவணை, தமிழக சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ், தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு குறித்த விவரங்களும் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளன.