இடங்கள்
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவகல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான இடங்கள் 2,655 உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக 398 போய்விடும். மீதம் உள்ள 2,257 இடங்களில் தமிழக மாணவர்கள் சேர வேண்டும். அரசு பல்மருத்துவகல்லூரி சென்னை பிராட்வேயில் உள்ளது. அந்த கல்லூரியில் 100 இடங்கள் இருக்கின்றன.
இந்த விண்ணப்பங்களில் பழைய மாணவர்களின் விண்ணப்பங்கள் 4 ஆயிரத்து 679 ஆகும். முதல் பட்டதாரிகள் 12 ஆயிரத்து 242 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தகுதியான அனைத்து மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு உடல் ஊனமுற்றோர், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு கடந்த 19-ந்தேதி சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
பழைய மாணவர்கள்544 பேருக்கு எம்.பி.பி.எஸ்.
20-ந்தேதி மருத்துவ படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட பொது கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது.
கலந்தாய்வில் 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின. இவை அனைத்தும் அரசு மருத்துவகல்லூரிகளில் உள்ளவை.
சுயநிதி மருத்துவகல்லூரிகளில் உள்ள 590 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவகல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின. இந்த கலந்தாய்வில் 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களில் பழைய மாணவர்கள் 544 இடங்களை பெற்றனர். இது தொடர்பான வழக்குதான் நீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது கட்ட கலந்தாய்வு
2-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. அப்போது சுயநிதி பல் மருத்துவகல்லூரிகளில் உள்ள 746 இடங்கள் நிரப்பப்படும். சுயநிதி மருத்துவகல்லூரிக்கு அனுமதி கிடைத்து அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வந்தால் அந்த கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளது.
கலந்தாய்வை மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம், இணை இயக்குனர் டாக்டர் அறிவழகன் ஆகியோர் உடன் இருந்து கண்காணித்தனர்.
கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் சென்றபோது அவர்கள் கல்லூரியை தேர்ந்து எடுத்ததற்கான ஒதுக்கீட்டு ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை எந்த தேதியில் வழங்கப்படும் என்பது குறித்து நீதிமன்ற உத்தரவையொட்டி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று மருத்துவ கலந்தாய்வு நடத்திய அதிகாரிகள் தெரித்தனர்.








