எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு
நற்செய்தியாக, நாட்டில் மேலும் ஆறு ஐ.ஐ.எம்., கல்வி மையங்களுக்கு மத்திய
அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.
கடந்த ஆண்டு, ஜூலை மாதம்,
பார்லிமென்டில் பட்ஜெட் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,
இந்திய மேலாண்மை கல்வி மையம் எனப்படும் ஐ.ஐ.எம்.,கள், ஐந்து
நிர்மாணிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த மத்திய
அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக ஆறு ஐ.ஐ.எம்.,கள் அமைக்க ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்:
ஆந்திராவில்
விசாகப்பட்டினம், பீகாரில் புத்தகயா, இமாச்சலில் சிர்மார்,
மகாராஷ்டிராவில் நாக்பூர், ஒடிசாவில் சம்பல்பூர், பஞ்சாபில் அமிர்தசரஸ்
ஆகிய நகரங்களில், புதிதாக ஆறு ஐ.ஐ.எம்.,கள் நிர்மாணிக்க, மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஐ.ஐ.எம்., மையத்திலும்,
துவக்கத்தில், முதுநிலை பட்டப் படிப்பில் 140 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, ஏழு ஆண்டுகள் முடிவில், 560
மாணவர்கள் வரை சேர்க்கப்படுவர்.







