சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் திங்கள்கிழமை (ஜூன் 15) மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.








