ஆசிரியர்
தகுதி தேர்வுக்கு ( TET ) விரைவில் அறிவிப்பு வரும் என்று மாண்புமிகு
பள்ளிக் கல்வி அமைச்சர் கடந்த மாதம் அறிவித்திருந்தார். அது பற்றிய வாதப்
பிரதிவாதங்கள் வந்தபோது 1.டெட் தேர்வே வராது என சிலரும்,
2.ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு முடிவு சொல்லாமல் டெட் வராது என சிலரும்,
3.வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் முன்னர் டெட் வராது என சிலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதில் முதலிரண்டு கருத்துக்களையும் நாம் எளிதில் புறந்தள்ளி விடலாம்.
மூன்றாவது கருத்தைப் பொறுத்தவரை அவ்வாறு தீர்ப்புக்கு பின்னர்
அறிவிப்பு வரலாம். அதேநேரம் தீர்ப்புக்கு முன்னர் வருவதற்கும் எந்த தடையும்
இல்லை. அதாவது This notification is subject to the final outcome of the
writ appeal which is pending before the honourable supreme court of
India. என்று அறிவிப்பிலேயே குறிப்பிட்டுவிட்டு வெளியிட முடியும். அதற்கு
எந்த தடையும் இல்லை என்பதே எனது கருத்து.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். 2016 ம் ஆண்டு சட்டமன்ற
பொதுத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் பிப்ரவரி - மார்ச்
மாதங்களில் நடைமுறைக்கு வரும் முன்பாக நீங்கள் எல்லாம் பணியில் சேர்ந்து
விடுவீர்கள். அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்-கல்விக்குரல்
நன்றி விடியல்