கர்ப்ப காலத்தில், பெண்கள் எளிய யோகா பயிற்சிகளை செய்தால், உடல் வலி,
மன அழுத்தம் குறையும்; சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும்; சிசு
வளர்ச்சிக்கும் நல்லது' என்கின்றனர், அரசு சித்த மருத்துவர்கள்.
சர்வதேச யோகா தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, யோகாவின் அவசியத்தை வலியுறுத்த, பொது இடங்களில், பிரம்மாண்டமாக யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், 'யோகா என்பது சித்த மருத்துவத்தின் ஒரு பகுதி தான், கர்ப்பிணி பெண்கள் எளிய யோகா பயிற்சி செய்தால், சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும்' என்கின்றனர், அரசு சித்த மருத்துவர்கள்.
இதுகுறித்து, சென்னை அரசு சித்த மருத்துவர்கள் மலர்விழி, கரோலின் கூறியதாவது:சர்வதேச யோகா தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, யோகாவின் அவசியத்தை வலியுறுத்த, பொது இடங்களில், பிரம்மாண்டமாக யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், 'யோகா என்பது சித்த மருத்துவத்தின் ஒரு பகுதி தான், கர்ப்பிணி பெண்கள் எளிய யோகா பயிற்சி செய்தால், சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும்' என்கின்றனர், அரசு சித்த மருத்துவர்கள்.
யோகா என்ற சொல்லை உலகிற்கு அறிமுகம் செய்தது, மருத்துவ யோகாவின் தந்தை திருமூலர் தான். மற்றொருவர் பதஞ்சலி; இவர் பக்தி யோகாவின் தந்தை. திருமூலரின்
திருமந்திரத்தில், அஷ்டாங்க யோகா பற்றியும், யோகாவின் நன்மைகள் குறித்த பாடல்களும் உள்ளன. காலையில் யோகா செய்தால், உடலில் பித்தம் குறையும்; உடல் இலகுவாகும், மதியம் செய்தால், வாதம் தன்னிலை அடைவதுடன், வயிற்றுக்கோளாறு சீராகும், மாலையில், பயிற்சி செய்தால் கபம் குறையும்; சோம்பல் நீங்கும் என, பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
சுக பிரசவம்:
கர்ப்பிணி
பெண்கள் எளிய யோகா பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலும், மனமும்
பிரசவத்திற்கு எளிதில் தயாராகும். பயம் நீங்கி, உடல் சுறுசுறுப்பாகும்.
மசக்கை, மலக்கட்டு, கால்வலி போன்ற உபாதைகளில் இருந்து விடுபடுவதுடன், சுக
பிரசவத்திற்கும் வழி வகுக்கும்; வயிற்றில் உள்ள குழந்தைகளின்
வளர்ச்சிக்கும் நல்லது. பிரசவத்திற்குப்பின், விரைவில் இயல்பு நிலைக்கு வர
உதவும்.
எவ்வாறு செய்யலாம்?
முதல்
மூன்று மாதங்களுக்கு நின்ற நிலையில் செய்யக்கூடிய ஆசனங்கள் செய்யலாம்;
கால்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கி, கால் வலி ஏற்படாது.நான்கு
மாதங்களுக்கு பின், சுவர், நாற்காலி உதவியுடன் நின்ற நிலையில் செய்யும்
ஆசனங்களை செய்யலாம்; பெருமளவு ஆசன நேரத்தைக் குறைத்துக் கொண்டு,
பிராணாயாமம் மற்றும் தியான பயிற்சிகளை செய்வது நல்லது.10வது வாரம் முதல்,
14வது வாரம் வரை, வயிற்றுப்பகுதிக்கு அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகள்
செய்யக்கூடாது.
எந்தெந்த ஆசனங்கள்?
சுகாசனம், வஜ்ராசனம் (மாறுதல்); குய்ய பாதாசனம்,
தடாசனம், கடிசகராசனம், உட்கட்டாசனம், பர்வட்டாசனம்,
மார்ஜாரி ஆசனம், காளியாசனம், சேது பந்தாசனம், சாந்தி ஆசனம், யோக நித்ரா, நாடி சுத்தி பிராணாயாமம் மற்றும் தியானம் செய்யலாம்.ஆசனங்கள் செய்யும்போது, கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு ஏற்றார்போல் மாறுதல்களை செய்து கொள்ளலாம். அனைத்து ஆசனங்களையும் ஒருவர் செய்ய வேண்டும் என்பதில்லை. கர்ப்பிணி பெண்களால், எளிதாக செய்ய முடிந்த சில ஆசனங்கள் செய்தால் போதும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.