ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஓபிஎஸ் குறித்த சர்ச்சை தொர்டர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்தது. எனினும், இதன் மீதான ஆர்வமும், ஈர்ப்பும் ஊழியர்களிடையே குறைவாகவே உள்ளது.
மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் கூறியது என்ன?
- ஆகஸ்ட் 13, 2025 அன்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
- இந்த பதிவில், அவர், டிசம்பர் 22, 2003 க்கு முன்பு அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் நியமிக்கப்பட்டு, ஆனால், ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பலன் கிடைக்காது என்று தெளிவுபடுத்தினார்.
- மார்ச் 3, 2023 அன்று இதற்கு தேர்வு செய்வதற்கான ஒரு முறை வாய்ப்பை அரசாங்கம் ஏற்கனவே வழங்கியிருந்தது.
- அதன் காலக்கெடு காலாவதியாகிவிட்டது. இப்போது புதிய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
பழைய ஓய்வூதிய திட்டம் யாருக்கு கிடைக்கும்?
2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட OM No. 57/05/2021-P&PW(B) -இன் படி, டிசம்பர் 31, 2003 க்கு முன் அறிவிக்கப்பட்ட முடிவில் தேர்ச்சி பெற்ற, காலியிடம் ஜனவரி 1, 2004 க்கு முன்பு அறிவிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே OPS க்கு விண்ணப்பிக்க முடியும் (ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்து NPS இல் சேர்ந்தவர்கள்). இந்த ஊழியர்கள் ஆகஸ்ட் 31, 2023 க்குள் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. மேலும் நியமன அதிகாரி நவம்பர் 30, 2023 க்குள் முடிவெடுக்க வேண்டியிருந்தது. இப்போது இந்த வாய்ப்பு முடிந்துவிட்டது.
SBI ஊழியர்களுக்கான விதிகள் என்ன?
மக்களவையில் பாட்டியாலா எம்பி தரம்வீர் காந்தி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சவுத்ரி, “ஆகஸ்ட் 1, 2010 க்குப் பிறகு SBI இல் சேர்ந்த எந்தவொரு ஊழியருக்கும் OPS சலுகைகள் கிடைக்காது” என்று தெளிவுபடுத்தினார். அந்த தேதிக்கு முன்பே அவரது ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கப்பட்டாலும் அல்லது ஏதேனும் "தவிர்க்க முடியாத காரணத்தால்" வேலை தாமதமானாலும் சலுகைகள் கிடைக்காது என அவர் கூறினார்.
OPS vs NPS vs UPS: OPS, NPS மற்றும் UPS இடையேயான வேறுபாடு என்ன?
Old Pension Scheme
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS):
- இதில், ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.
- இதில் ஊழியரிடமிருந்து எந்த பங்களிப்பும் கோரப்படாது.
- இது 2004 இல் நிறுத்தப்பட்டது.
- எனினும், சில மாநிலங்கள் இதை மீண்டும் அமல்படுத்தியுள்ளன.
National Pension System
தேசிய ஓய்வூதிய முறை (NPS):
- இது ஒரு சந்தை அடிப்படையிலான திட்டமாகும்.
- இதில் ஊழியரும் அரசாங்கமும் பங்களிப்பு செய்கின்றன.
- பணி ஓய்வின் போது நிலையான ஓய்வூதியம் கிடைப்பதில்லை.
- இது ஓய்வூதிய ஃபண்டின் செயல்திறனைப் பொறுத்தது.
Unified Pension Scheme
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS):
- OPS க்கு பதிலாக, மத்திய அரசு இப்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது NPS க்குள் ஒரு விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இதில், 25 வருட சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும்போது, கடைசி 12 மாதங்களின் அடிப்படை சம்பளத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்கிறது.
- ஊழியர் தனது சம்பளத்தில் 10% பங்களிப்பார், அரசாங்கம் 18.5% பங்களிக்கும்.
- இந்த விருப்பத்திற்கு மாற செப்டம்பர் 30, 2025 வரை கால அவகாசம் உள்ளது.
- இதுவரை, 1.35% ஊழியர்கள் மட்டுமே இதைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.