தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 1.24 லட்சம் பேர்
சமையல் எரிவாயு மானியத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர் என எண்ணெய் நிறுவன
அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
இதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள சுமார் 15.5 கோடி சமையல் எரிவாயு
இணைப்புகளில், சனிக்கிழமை நிலவரப்படி சுமார் 13.84 கோடி பேர் மானியத்
திட்டத்தில் இணைந்துவிட்டனர்.
தமிழகத்தில் 1.41 கோடி பேர்: தமிழகத்தைப் பொருத்தவரைசமையல் எரிவாயு மானியம்: தமிழகத்தில் 1.24 லட்சம் பேர் ஒப்படைப்பு:
1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் சனிக்கிழமை (ஆக.8)
நிலவரப்படி சுமார் 1.41 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில்
இணைந்துள்ளனர். சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே இந்தத் திட்டத்தில் இணையாமல்
உள்ளனர். மேலும், மானியத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு முன்வைப்புத் தொகை
ரூ.568-ம், அந்தந்த மாதத்துக்கான மானியத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
மானியம் ஒப்படைப்பு: இது தவிர, வசதி படைத்தோர் சமையல்
எரிவாயு மானியத்தைக் கைவிட வலியுறுத்தும் "கிவ் இட் அப்' என்ற பிரசாரத்தை
கடந்த மார்ச் 27-ஆம் தேதி பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து,
கிவ் இட் அப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மானியத்தை ஒப்படைக்க விரும்பும்
வாடிக்கையாளர்களுக்கென ஜ்ஜ்ஜ்.ஞ்ண்ஸ்ண்ற்ன்ல்.ண்ய் என்ற தனி இணையதளம்
தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இணையதளத்தைப் பயன்படுத்தாத
வாடிக்கையாளர்களும், எளிய முறையில் மானியத்தை ஒப்படைக்க ஏதுவாக குறுந்தகவல்
(எஸ்.எம்.எஸ்) மூலம் மானியத்தை ஒப்படைக்கும் வசதியும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம்,
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களும்
மானியத்தை ஒப்படைக்க முடியும்.
இதன்படி, தமிழகத்தில் மட்டும் சுமார் 1.24 லட்சம்
வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு மானியத்தை ஒப்படைத்துள்ளனர் என எண்ணெய்
நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.800 கோடி மானியம் மிச்சம்
சமையல் எரிவாயு உருளை மானியத்துக்காக மட்டும் கடந்த
2013-14-ஆம் ஆண்டில் சுமார் ரூ. 40,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில்,
போலி இணைப்புகள், மானிய விலையில் பெறப்படும் சமையல் எரிவாயு உருளைகளை
கூடுதல் விலைக்கு விற்பது போன்ற முறைகேடுகளால் அரசுக்கு பலகோடி ரூபாய்
இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இருப்பினும், இதுவரை நாடு முழுவதும் 3 எண்ணெய்
நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 17.74 லட்சம் பேர் மானியம் வேண்டாம் என
ஒப்படைத்துள்ளதன் மூலம் மானியத் தொகையாக ஆண்டுக்கு சுமார் ரூ.847
கோடிக்கும் மேல் மிச்சமாகியுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள்
தெரிவித்தனர்.