சம்மேளனம் அறிவிப்பு
செப்டம்பர் 2-ந் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் வருமான வரி துறை, சுங்க வரி துறை, கலால் வரி துறை, தபால் துறை, கணக்காளர் பொது அலுவலகம், கல்பாக்கம் அனுமின் நிலையம், ராஜாஜி பவன், சாஸ்திரி பவன் போன்ற மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
ரெயில்வே துறை ஊழியர் கள் மட்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.
1லு லட்சம் ஊழியர்கள்
நாடு முழுவதும் 3 கோடி மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் 1லு லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். மாநில அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொள்கின்றனர்.
கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.








