தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு வருகிற கல்வி
ஆண்டில் இருந்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதற்கான பணி வருகிற
ஜனவரி மாதம் முதல் தொடங்க இருப்பதாக தனியார் பள்ளிகளுக்கான கட்டண
நிர்ணயக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
12 ஆயிரம் பள்ளிகள்
தமிழ்நாட்டில் உள்ள நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 12 ஆயிரத்திற்கு மேல் உள்ளன. இந்த பள்ளிகளில் கட்டணம் தாறுமாறாக வசூலிப்பதாக அரசுக்கு புகார் வந்தது. இதையொட்டி தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ.வளாகத்தில் உள்ளது. கமிட்டியின் தலைவராக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு உள்ளார்.
இந்த கமிட்டி, பள்ளிக்கூடத்தில் தரப்படும் ஆவணங்கள் அடிப்படையில்
விசாரித்து கட்டணம் நிர்ணயித்து வருகிறது. பள்ளிக்கு பள்ளி கட்டணம்
மாறுபடுகிறது. பள்ளிகளில் கட்டமைப்பு வசதி அதிகம் இருத்தல் மற்றும்
நகர்ப்புற பள்ளிகளாக இருந்தால் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. கட்டமைப்பு
வசதி குறைவாகவும் மற்றும் கிராமப்புற பள்ளிகளாக இருந்தால் கட்டணம் குறைந்து
நிர்ணயிக்கப்படுகிறது.12 ஆயிரம் பள்ளிகள்
தமிழ்நாட்டில் உள்ள நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 12 ஆயிரத்திற்கு மேல் உள்ளன. இந்த பள்ளிகளில் கட்டணம் தாறுமாறாக வசூலிப்பதாக அரசுக்கு புகார் வந்தது. இதையொட்டி தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ.வளாகத்தில் உள்ளது. கமிட்டியின் தலைவராக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு உள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 12 ஆயிரம் நர்சரி, மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கமிட்டி அறிவித்தது.
533 பள்ளிகளுக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது
ஆனால் சில பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு நிர்ணயித்த கட்டணம் போதாது என்று கூறி நீதிமன்றத்தை நாடினார்கள். அவ்வாறு நாடியவர்களுக்கும், எற்கனவே நிர்ணயிக்க அழைக்கப்பட்டும் வராதவர்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி 533 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணம் நிர்ணயிக்கும் பணி
ஆனால் 11 ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த கல்வி (2015-2016) ஆண்டுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கல்வி கட்டணம் முடிவடைகிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வருகிற மே மாதம் வரை அமலில் இருக்கும். ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போதுதான் புதிய கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். அதனால் 2016-2017, 2017-2018, 2018-2019, ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
இது குறித்து கட்டண நிர்ணய கமிட்டி தரப்பில் கூறும்போது ‘வருகிற கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும்பணி இன்னும் தொடங்கப்பட வில்லை. வருகிற ஜனவரி மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பாகவோ தொடங்கலாம்’ என்று தெரிவித்தனர்.