இந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,9,11 ஆகிய வகுப்புகளில் 37 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து, விடுபட்ட மாணவர்களையும் பள்ளிகளில் சேர்ப்பதற்காகக் கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருந்தாலும், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.








