கள்ளக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் திரு.நா.இராமச்சந்திரன் அவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ந்தேதி ஆசிரியர் தினத்தன்று மேதகு குடியரசு தலைவர் கே.கே.எம் பிரணாப்முகர்ஜி அவர்களின் திருக்கரங்களால் தேசிய நல்லாசிரியர் விருது பெற இருக்கிறார் என்பது,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.1999 முதல் 2015வரை கள்ளக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார்.கிராமபுறத்தில் இருந்து வரும் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவித்து 4 முறை மாநில அளவில் தங்கபதக்கத்தை தன் பள்ளி மாணவர்களுக்கு பெற்றுத்தந்துள்ளார்.இன்றும் கபடியில் சர்வதேச அளவில் நடுவராக விளங்குகிறார்.தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டியில் தமிழக அணிக்காக நான்கு முறை பயிற்சியாளர் ஆக சென்றுள்ளார்.தன் வாழ்நாளில் 22 மாணவர்களை தேசிய அளவில் விளையாட்டு வீரர்களாக மாற்றியுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு பல விளையாட்டு போட்டிகளை நடுவராக இருந்து நடத்தியதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,மாவட்ட ஆட்சியர்,மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் தொடர்ந்து பாராட்டுதலை பெற்று வருகிறார்.இவர் தன்னுடைய வாழ்நாளில் பல பதவி உயர்வுகள் பள்ளிக் கல்வித்துறையில் வழங்கப்பட்டும் ,மாணவர்களின் விளையாட்டுத்திறனை மட்டுமே ஊக்குவிப்பதே தன்னுடைய வாழ்நாள் இலட்சியமாக கொண்டுள்ளார்.2009ஆம் ஆண்டு இவர் மாநில நல்லாசிரியர் விருதினை மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நல்ல உள்ளம் கொண்ட அன்பான மனிதருக்கு கல்விக்குரல் நெஞ்சார வாழ்த்துகிறது.என்றும் ஆசிரியர்கள் நலனில் கல்விக்குரல்.மென்மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்தும் அன்பு நண்பர்கள் ஆர்.பழனிவேல் மாவட்ட செயலர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் .விழுப்புரம் மாவட்டம்.








