Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சிதம்பரம் நடராஜர் கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
சிதம்பரம் நடராஜர் கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
சிதம்பரம் நடராஜர் கோவிலை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இதுகுறித்து
தமிழக அரசின் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ஆர்.நாகசாமி மற்றும்
விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் அகில உலக தலைவர் எஸ்.வேதாந்தம் ஆகியோர்
இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிதம்பரம் நடராஜர் கோவில்
இறைவன் நடனமாடிய சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் புனிதமானது என்று
உலகில் வாழும் அனைத்து இந்துக்களால் கருதப்படுகிறது. அத்துடன்
பிரபஞ்சத்தின் மையமாகவும் இந்த கோவில் திகழ்கிறது.
இந்த கோவிலின் வரலாறு 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும்.
கோவிலின்
கருவறையான சித்சபை கடந்த 9–ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.
17–ம் நூற்றாண்டில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
குலோத்துங்க சோழன்
கோவிலின் உள்பகுதிகளை சோழ மன்னன் குலோத்துங்கனின் உத்தரவுப்படி
நரலோக வீர கட்டினார். குலோத்துங்க மன்னனின் மகன் விக்ரம சோழன் 12–ம்
நூற்றாண்டு தொடக்கத்தில் 900 ஆண்டுகளுக்கு பிறகு கல்வெட்டுகள்
செதுக்கப்பட்டன. 1150–ம் ஆண்டுகளில் 2–ம் குலோத்துங்க சோழன் கோவிலின்
வெளிப்பகுதியையும், 4 கோபுரங்களையும் கட்டியுள்ளார். அதே காலகட்டத்தில்
கோவில்களில் கிரானைட் கற்களும் பதிக்கப்பட்டன. அனைத்து வேலைகளையும்
குலோத்துங்க சோழன் உடன் ராஜராஜ சோழன் கட்டியுள்ளார்.
13–ம்
நூற்றாண்டில் கோப்பெரும்சின்கா மற்றும் சுந்தர பாண்டியன் கோவிலை மாற்றம்
செய்யாமல், புதிய கட்டமைப்புகளை கட்டினர். புகழ் பெற்ற விஜயநகரத்தை ஆட்சி
செய்து வந்த கிருஷ்ணதேவராயர், வடக்கு கோபுரத்தில் எந்த புதிய அமைப்புகள்
இல்லாமல் கட்டினார்.
உலக புகழ் பெற்ற நினைவு சின்னம் மொழி,
இலக்கியம், நடனம், இசை, தத்துவம் மற்றும் மதத்துக்ககாவே கட்டப்பட்டு, பல
நூற்றாண்டுகளாக எந்தவித மாற்றமும் செய்யாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது மன்னர்களின் மொத்த சிந்தனைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
யுனெஸ்கோ
கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் 13–ம் நூற்றாண்டில்
கட்டப்பட்டதை 12 ஆண்டுகளுக்கு முன்பு இடித்துவிட்டு, புனரமைக்காமல்
பாதியில் விட்டுவிட்டுள்ளனர். இடித்த இடத்தில் கிழக்கு நோக்கிய
கட்டிடத்தில் ஒரு கட்டிடம் கீழ்நோக்கி குறுகலாக கட்டப்பட்டுள்ளது.
திருவிழா
காலங்களில் அதிக அளவில் நெரிசல் ஏற்பட்டு விபத்துக்களுக்கும் வாய்ப்பு
உள்ளது. தமிழக அரசும் இதனை பார்வையிட்டு முறையாக மாற்றியமைக்க வேண்டும்.
புகழ்
வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக யுனெஸ்கோ
அறிவிக்க, மத்திய தொல்லியல் ஆய்வு துறையும், மத்திய அரசும் நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








