இலக்கியங்களை மாணவர்கள் ஆராய்ச்சித் திறனோடு கற்க வேண்டும். அப்போதுதான் அதன் பெருமையை உணர முடியும். பேச்சு, நடிப்பு எதுவானாலும் தொடக்கம் நன்றாக இருந்தால், அதற்கு சிறப்பு தானாக வந்துவிடும். தமிழன் நேர்மறையாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளான். இதற்கு காரணம் இலக்கியங்கள் எதிர்மறையாகப் பேசக் கற்றுக் கொடுக்கவில்லை. தமிழ் மொழியில் சொற்களுக்கு எந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும், அந்த எழுத்தை எப்படி விளக்குவது போன்றவை இப்போது பலருக்கும் தெரிவதில்லை. இலக்கியங்களை ஆழ்ந்து படித்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பிழையின்றி எழுத இலக்கியங்களைக் கற்க வேண்டியது மிகவும் அவசியம்.
தமிழர்கள் இப்போது தங்கள் நாகரிகத்தையும், பண்பாட்டையும் தொலைத்து விட்டனர். நம் நாகரிக சிறப்பை இலக்கியங்கள்தான் உலகுக்குக் கொண்டு செல்கின்றன. அதை தமிழர்கள் படித்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.








