திருப்பத்தூர் வட்டத்தில் காலியாக
உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கந்திலி, பதனவாடி, கூடப்பட்டு, புதுப்பட்டி,
நரவிந்தம்பட்டி, மொளகரம்பட்டி, பொம்மி குப்பம் ஆகிய வருவாய் கிராமங்களில்
காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
இதற்கான தகுதிகள்:ஜந்தாம் வகுப்பு தேர்ச்சி, எட்டாம்
வகுப்பு தோச்சி, பத்தாம் வகுப்பு தோல்வி. ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
அருந்ததியர் ஆகியோருக்கு குறைந்தபட்சம் 21 1.7.2015ன்படி வயது அதிகபட்சம்
35 வயது. பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர், இஸ்லாமியர் ஆகியோருக்கு
குறைந்தபட்சம் 21 வயது, அதிக பட்சம் 32 வயது. பொதுப்பிரிவிற்கு
குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 30 வயது இருத்தல் வேண்டும்.
சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும். நல்ல உடல் தகுதியுடன்
இருத்தல் வேண்டும். நீச்சல் தெரிந்து இருக்க வேண்டும். மேற்காணும் கல்வித்
தகுதி மற்றும் வயதிற்குட்பட்ட சம்பந்தப்பட்ட வருவாய் கிராமம் மற்றும் அதை
சுற்றியுள்ள வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க
வேண்டும்.
வெள்ளைத் தாளில், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படத்தை
ஒட்டி, பெயர், முகவரி, பிறந்த நாள், மதம், இனம், கல்வித் தகுதி முன்னுரிமை,
கோருவதற்கான சான்று ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய
சான்றொப்பத்துடன இணைத்து 31.8.2015ம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ,
பதிவு அஞ்சலிலோ அளிக்கலாம்.
விண்ணப்பத்தை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என
ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.