புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும், ஏற்கெனவே இருக்கும் மருத்துவக்
கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு ஒப்புதல்
அளிக்க மறுப்பதால், நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று
உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மத்திய அரசின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர். தவே, விக்ரமஜித் சென், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மத்திய அரசின் முடிவால் நாட்டில் குறைந்த
எண்ணிக்கையிலேயே மருத்துவர்கள் இருப்பார்கள். இந்த முடிவானது, மாணவ
சமுதாயத்தினருக்கு மட்டுமன்றி, நாட்டு மக்களுக்கும் இழப்புதான். ஏனெனில்,
இதனால் நாட்டு மக்களும் பாதிக்கப்படுவர்.மத்திய அரசின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர். தவே, விக்ரமஜித் சென், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இருந்தே எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைந்திருப்பது தெரிய வருகிறது. ஆகையால், புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக வரும் விண்ணப்பங்கள் மீது, விண்ணப்பிக்கப்பட்ட நாள் முதலே இந்திய மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்த மாணவர்களின் சேர்க்கை கடந்த 2013-14ஆம் ஆண்டில் 51,598ஆக இருந்ததாகவும், அந்த எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் 54,348ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், 2014-15ஆம் ஆண்டில் 3,920 இடங்களுக்கான சேர்க்கை புதுப்பிக்கப்படவில்லை; இந்தக் காரணங்களினால், ஒட்டுமொத்தமாக 1,170 இடங்கள் குறைந்து விட்டன என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.