முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டு மக்களுக்கு தகுதியான மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது இந்த அரசின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாகும். புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது என்பது ஒரு தொலைநோக்கு திட்டமாகும்.
இந்திய மருத்துவக் குழு மத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி
களுக்கு தேவையான மருத்து வர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள்,
தேவையான கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங் கள் வழங்கப்பட வேண்டும்.
ஆண்டிற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் எனது அரசு புதிய
மருத்துவ கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், சிவகங்கை,
திருவண்ணா மலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட் டம் ஆகிய இடங்களில்
100 மாணவர்கள் சேர்க்கையுடன் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள்
தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஏழு அரசு மருத்துவக்
கல்லூரிகளில், கூடுதலாக 410 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள்
அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மக்களுக்கு தகுதியான மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது இந்த அரசின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாகும். புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது என்பது ஒரு தொலைநோக்கு திட்டமாகும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசு எடுத்த தொடர் முயற்சிகளினால், கூடுதலாக 710 மருத்துவபட்டப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. கரூரில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நான் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளேன். அதற்கான பணிகள் துவங்கப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி புதுக் கோட்டையில் தொடங்கப் படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில், ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே சென்னை யில் உள்ளது. எனது தலை மையிலான அரசு பொறுப் பேற்றதற்கு பிறகு, இந்த பல் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதன் காரண மாக, முதுகலை பல் மருத் துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை 35&லிருந்து 58&ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் பல் மருத்துவமனை ஓர் ஒப்புயர்வு மையமாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 50 கோடி ரூபாய் செலவில், தென் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்களுக்கு 6 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் விடுதி கட்டடம் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு தங்கும் குடியிருப்புகள் இருந்தால், அங்கு அவர்கள் தங்கி மேலும் சிறப்பாக பணி செய்ய முடியும் என்பதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 4 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் குடியிருப்புகளும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், 30 தங்கும் குடியிருப்புகள் மற்றும் 400 மாணவர்கள் அமரும் வகையில் விரிவுரை அரங்கமும் கட்டப்படும்.
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் நோயாளி களின் வசதிக் காக மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரு கின்றன. இதனைத் தொடர்ந்து, இத்தகைய வசதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், முதல் கட்டமாக 20 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறேன்.
கோபிச்செட்டி பாளையம் அரசு மருத்துவ மனையில் பழுதடைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட் டிருந்தது.
இது தவிர அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் உள்பட மொத்தம் 22 திட்டங் களை இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள் ளார்.