எட்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 9
புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர்-வேலைவாய்ப்புத்
துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் அந்தத் துறையின்
மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் மோகன்
பதிலளித்து வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பைத் தரும் புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளது. அதன்படி,
கடலூரில் மெரைன் இன்ஜின் பிட்டர் பிரிவும், கோவையில் டிஜிட்டல்
போட்டோகிராபர், பரமக்குடியில் சூரிய சக்தி சாதனங்கள்
பராமரிப்பு-மகளிருக்கென துணி வெட்டுதல்-தைத்தல் பிரிவுகள், போடியில்
எலக்ட்ரீசியன் பிரிவும், அரக்கோணத்தில் மொபைல் போன் தொழில் பிரிவும்,
திண்டுக்கல்லில் ஏ.சி. தொழில் பிரிவும், திருச்சியில் மின்தூக்கி தொழில்
பிரிவும், சேலத்தில் வர்ணம் பூசுபவர் தொழில் பிரிவும் தொடங்கப்படும் என்று
அமைச்சர் மோகன் அறிவித்தார்.