Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
19 நாட்கள் நடந்த கூட்டத்தொடர்: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு:
கடந்த 19 நாட்களாக நடந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நிகழ்ச்சிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த ஆண்டில்...
சட்டசபை நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று சபாநாயகர் ப.தனபால் நிகழ்த்திய உரை வருமாறு:–
2011–ம்
ஆண்டில் தொடங்கிய பதினான்காவது சட்டமன்றப் பேரவையின் பத்தாவது கூட்டத்
தொடரின் முதல் கூட்டம் 17.2. 15 அன்று தொடங்கி 23.2.15 வரையும், இரண்டாவது
கூட்டம் 25.3.15 அன்று தொடங்கி ஏப்ரல் 1–ந் தேதி வரையும், மூன்றாவது
கூட்டம் 24.8.15 அன்று தொடங்கி 29.9.15 (நேற்று) வரையும் நடைபெற்றுள்ளது.
அந்த
வகையில் இந்தக் கூட்டத் தொடர் (ஜனவரி–செப்டம்பர் வரை) மொத்தம் 29 நாட்கள்,
அதாவது, 157 மணி 21 நிமிடங்கள் கூடியுள்ளது. தற்போது 54 மானியக்
கோரிக்கைகள் விவாதித்து நிறைவேற்றப்பட்டன. 121 எம்.எல்.ஏ.க்கள் 43 மணிநேரம்
55 நிமிடங்கள் உரையாற்றினர்.
வெட்டுத் தீர்மானங்கள்
இவர்களில் ஆளும்கட்சியினர் 35 பேர் 9 மணி 12 நிமிடங்கள் பேசினர்.
மற்ற கட்சியினர் 86 பேர் 34 மணி 43 நிமிடங்கள் பேசினர். அதாவது, இதர
கட்சியினருக்கு ஆளும் கட்சியினரைவிட கூடுதலாக 25 மணி 31 நிமிடம் பேச நேரம்
அளிக்கப்பட்டுள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது துறை சம்பந்தமாக
58 நிமிடங்கள் பேசியுள்ளார். மற்ற அமைச்சர்கள் 25 மணி 40 நிமிடங்கள்
பதிலளித்தனர். எம்.எல்.ஏ.க்களால் கொடுக்கப்பட்ட 2 ஆயிரத்தது 918 வெட்டுத்
தீர்மானங்களில் 2ஆயிரத்து 617 அனுமதிக்கப்பட்டு, அவையில் 550
முன்மொழியப்பட்டன.
இந்த கூட்டத்தொடர்
கடந்த ஆகஸ்டு 24 முதல் செப்டம்பர் 29 வரை (நேற்று) 19 நாட்கள் இந்த
கூட்டத் தொடர் நடைபெற்றது. அதில் 335 கேள்விகளும் 640 துணைக் கேள்விகளும்
கேட்டப்பட்டன. அதிக பதிலளித்தவர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (24
பதில்கள்). அவசரம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக 3 சிறப்புக் கவன
ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதில் 12 எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.
940
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டு, 499 தீர்மானங்களுக்கு அனுமதி
அளிக்கப்பட்டு, அவையில் 15 தீர்மானங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இரண்டு
பிரச்சினைகள், அவை உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன. ஒரு பிரச்சினையில்
அவைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் 22 சட்ட
மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
181 அறிக்கைகள்
கடந்த ஆண்டு வரை பல்வேறு துறைகள் சம்பந்தமாக 150 அறிவிப்புகளை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இந்த ஆண்டு கூட்டத் தொடரில் மேலும்
31 அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் புதிய சரித்திரமாக கடந்த
2011–ம் ஆண்டில் இருந்து இதுவரை 181 அறிக்கைகளை பேரவை விதி 110–ன் கீழ்
அளித்துள்ளார். இது கின்னஸ் சாதனையாகும்.
17.2.15 தொடங்கி 29.9.15
வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நிகழ்ச்சியில் நாள் தவறாமல் தினமும்
சட்டசபைக்கு, கலைஅரசு (பா,ம.க.) வி.பி.கலைராஜன் (அ.தி.மு.க.), டாக்டர்
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சிவசங்கர் (தி.மு.க.), நாகைமாலி
(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), பொன்னுப்பாண்டி (இந்திய கம்யூனிஸ்டு), ஜான்
ஜேக்கப் (காங்கிரஸ்) உட்பட 67 எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். சட்டசபை
நிகழ்ச்சிகளை 16 ஆயிரத்து 526 பேர் பார்வையிட்டனர். இவர்களில் 4 ஆயிரத்து
222 பேர் பெண்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத் தொடர் தள்ளிவைப்பு
19 நாட்கள் நடந்து முடிந்த இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளில்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இசைமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின்
மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. மற்ற 18
நாட்கள் அவை நிகழ்ச்சிகள் நடந்தன.
அவையில் இருந்து இரண்டு நாட்கள்
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், புதிய தமிழகம் எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி
வெளியேற்றப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒரு நாள்
வெளியேற்றப்பட்டனர். தி.மு.க., காங்கிரஸ், புதிய தமிழகம், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு, பா.ம.க.கட்சியினர் பிரச்சினைக்கு ஏற்றார்போல் வெளிநடப்பு
செய்தனர்.
நேற்று நடந்த அவை நிகழ்ச்சியின் இறுதியாக அவை முன்னவரும்
நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி
வைக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அது குரல் ஓட்டெடுப்பின் மூலம்
நிறைவேறியதை அடுத்து, அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர்
ப.தனபால் அறிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








