வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர் தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதையாக எழுதப்பட்ட "கள்ளிக்காட்டு இதிகாசம்', மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன
படைப்பு என்பதால் கவனம் பெறுகிறது.
தமிழில் வெளியான இந்த நாவலை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டுசெல்ல சாகித்ய அகாதெமி முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆங்கிலம், அஸ்ஸாமி, வங்காளி, போடா, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தெலுங்கு, உருது ஆகிய 23 மொழிகளில் மொழிபெயர்க்க சாகித்ய அகாதெமி முடிவெடுத்துள்ளது. "கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலின் மொழிபெயர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று சாகித்ய அகாதெமியின் செயலாளர் சீனிவாசராவ் கவிஞர் வைரமுத்துவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கூறியது:
"கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே கட்டப்படும் கலாசாரப் பாலமாகும். மொழிபெயர்ப்பு
முடிந்ததும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுக விழா நடத்தப்படும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.








