Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
496 cooperative societies in the state elections on 5 nomination , voting on 14:
தமிழகத்தில் உள்ள 496 கூட்டுறவுச்சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு
அக்டோபர் 14–ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 5–ந்
தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களுக்கான மாநிலத்
தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், அதிகாரியுமான ம.ரா.மோகன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கூட்டுறவுச்சங்க தேர்தல்
தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை அபிவிருத்தி ஆணையரின்
கட்டுப்பாட்டில் 146 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் புதிதாக
தொடங்கப்பட்டு உள்ளன.
அதேபோல் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின்
கட்டுப்பாட்டில் செயல்படும் 9 சங்கங்கள், கைத்தறி மற்றும் துணி நூல்
இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 சங்கம், கதர் கிராமத் தொழில்
வாரிய முதன்மை செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 சங்கம் மற்றும்
மீன்வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 4 சங்கங்கள் ஆக 161
கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதன் மூலம் 1,731
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவர்களில்
இருந்து 161 தலைவர் மற்றும் 161 துணைத்தலைவர்களை
தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில
கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வேட்பு மனுதாக்கல்
வேட்பு மனுதாக்கல் 5–ந் தேதி தொடங்குகிறது. இதற்கான வாக்குப்பதிவு
14–ந் தேதி நடைபெறும். தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் 19–ந்
தேதி அன்று நடைபெறும். இந்த 1,731 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 311
இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கும், 477 இடங்கள்
பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 335 கூட்டுறவுச்
சங்கங்களின் நிர்வாகக் குழுவில் பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டுள்ள 424
உறுப்பினர்கள் மற்றும் 79 தலைவர் மற்றும் 53 துணைத்தலைவர் ஆகிய காலி
இடங்களுக்கான தேர்தல்களும் இதே தேர்தல் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 5–ந்
தேதி காலை 10 மணி முதல் அன்று மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். மறுநாள்
6–ந் தேதி அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்று மாலை 4 மணி
முதல் 5 மணிக்குள் தகுதியான வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால்
வெளியிடப்படும்.
வேட்புமனு திரும்பப்பெறுதல்
வேட்பு மனுவை திரும்பப் பெற விரும்புவோர் அக்டோபர் 7–ந் தேதி காலை
10 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5
மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு
அக்டோபர் 14–ந் தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அன்று மாலை 5 மணி வரை
நடைபெறும். வாக்குகள் எண்ணும் பணி அக்டோபர் 15–ந் தேதி காலை 10 மணிக்கு
தொடங்குகிறது. வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட உடன் முடிவுகள்
அறிவிக்கப்படும்.
தலைவர், துணைத்தலைவர்
தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு
அக்டோபர் 15–ந் தேதி வெளியிடப்படும். அதற்கான தேர்தல் அக்டோபர் 19–ந் தேதி
காலை 10 மணிக்கு நடைபெறும்.
இத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச்
சங்கங்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட
தொடர்புடைய தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும்
ஆணையத்தின் வலைத்தளம் www.coopelection.tn.gov.in ல் தேர்தல் நடைபெறவுள்ள
கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். இவ்வாறு
அவர் கூறி உள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








