குழந்தைகளுக்கான 'இந்திர தனுஷ்' தேசிய தடுப்பூசித் திட்டம் அக்.,7 முதல்
ஜனவரி வரை 26 சுகாதார மாவட்டங்களில் நான்கு கட்டமாக நடக்கிறது.
மத்தியஅரசு
சார்பில், 'இந்திர தனுஷ்' தேசிய தடுப்பூசி திட்டத்தில் குழந்தைகளுக்கு
தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, இளம்பிள்ளை வாதம்,
தட்டம்மை, மஞ்சள் காமாலை பி , ஜப்பானிய மூளைக்காய்ச்சல், 'இன்புளுயன்சா
பி', ஆகிய எட்டு நோய்களுக்கான தடுப்பூசி முதற்கட்டமாக ,தமிழகத்தில் மதுரை,
விருதுநகர் உட்பட எட்டு சுகாதார மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை
நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் பயன் பெற்றனர்.
தற்போது
இரண்டாம் கட்டமாக, சென்னை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர்,
சேலம், திண்டுக்கல், பழநி, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம், துாத்துக்குடி உட்பட 16 சுகாதார
மாவட்டங்களிலும், ஏற்கனவே கடந்த முறை நடந்த விருதுநகர், கோவை, திருநெல்வேலி
உட்பட 10 சுகாதார மாவட்டங்களிலும் அக்டோபர், நவம்பர்,டிசம்பர், ஜனவரி
மாதங்களில் ஏழாம் தேதி துவங்கி ஏழு நாட்கள் இம் முகாம்
நடக்கிறது. ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர்.