செப். 7-இல் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி திறப்பு? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


செப். 7-இல் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி திறப்பு?

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வரும் திங்கள்கிழமை (செப்.7) திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 புதிய கல்லூரி: சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் ரூ. 212 கோடி செலவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
 மருத்துவக் கல்லூரிக்காக 7 தளங்கள் கொண்ட 7 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் தற்போது 3 கட்டடங்களில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிர்வாகப் பிரிவுகள் போன்றவை செயல்பட உள்ளன.
 இந்தக் கல்லூரியின் சார்பு மருத்துவமனையாக செயல்படுவதற்காக சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வந்த கஸ்தூர்பா காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனை பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
 100 இடங்கள்: புதிய மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களை தமிழக அரசு நிர்ணயித்தது. இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதியும் அளித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் 20-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியான ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற இரண்டு கட்ட கலந்தாய்வில் மாநில அரசின் ஒதுக்கீட்டில் 85 இடங்கள் நிரப்பப்பட்டன.
 திறப்பு விழா: பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில் மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்து வருகிறது.
 இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:
 கல்லூரியில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. கல்லூரிக்கான திறப்பு விழா செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது. கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
 திறப்பு விழா நடைபெற்று முடிந்ததும், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H