பெங்களூரு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு தூர்தர்ஷன் தொலைக்காட்சி
நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூருவில் உள்ள தூர்தர்ஷன்
தொலைக்காட்சி நிலையத்தில் காலியாக உள்ள உதவி செய்தி ஆசிரியர்,
தயாரிப்பாளர், பிரிவு ஆசிரியர், செய்தியாளர், இணையதள உதவி ஆசிரியர், இணையதள
உதவியாளர், பின் தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பு உதவியாளர், காணொளி
ஆசிரியர், ஒளிப்பதிவாளர், தகவல் உள்ளீடு அலுவலர், சிஜி இயக்குநர், கேமரா
உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணிக்கு தேவைப்படும் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றை
www.ddchandana.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். தேர்வு மற்றும்நேர்காணல்
மூலம் பணிக்கு ஆள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இப்பணிகள் அனைத்தும்
ஒப்பந்த அடிப்படையிலானது. விண்ணப்பதாரர்கள் கன்னடம் சரளமாக
பேசதெரிந்திருக்கவேண்டும். ஆங்கிலம், ஹிந்தி, கணினியில் ஓரளவு அறிவு
முக்கியம். விண்ணப்பங்களை அக்.26-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








