Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை: கரூர், புதுக்கோட்டையில் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்; ரூ.429 கோடி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவு:
அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை: கரூர், புதுக்கோட்டையில் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்; ரூ.429 கோடி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவு:
தமிழகத்தில், தற்போது 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
இதில் உள்ள இடங்களில் மொத்தம் 2,655 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
710 புதிய இடங்கள்
2011–ம் ஆண்டு முதல் இன்று வரை 710 எம்.பி.பி.எஸ். இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதுதவிர,
பெருந்துறையில் இந்திய சாலை போக்குவரத்து நிறுவனம் நடத்தும் மருத்துவ
கல்லூரியில் 60 மாணவர்களும், சென்னை கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவ
கல்லூரியில் 100 மாணவர்களும் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
5,665 எம்.பி.பி.எஸ். படிப்பு
கோவையில் கட்டப்பட்டு வரும் ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி முடியும்
தருவாயில் உள்ளது. இந்த கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்தும் என்று
முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல்,
தமிழகத்தில் உள்ள 13 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,350 மாணவர்களும், 10
நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 1,650
மாணவர்களும் என மொத்தம் 5,665 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து
வருகின்றனர்.
மேலும் 2 மருத்துவ கல்லூரிகள்
இதுதவிர, கரூரில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த
ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதேபோல், புதுக்கோட்டையில்
புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்
அவர் அறிவித்தார். இந்த 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 150 மாணவர்கள் என
மொத்தம் 300 பேர் படிக்க முடியும். அடுத்த கல்வி ஆண்டில் இந்த 2 மருத்துவ
கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
கூடுதலாக இடங்கள்
மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதற்கு அரசு
மற்றும் தனியார் துறைகளில் போதுமான தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அவசியம்
ஆகும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ
கல்லூரி துவங்கப்படவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஆண்டிற்கு
ஒன்று என மருத்துவ கல்லூரிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு
ஏற்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் 2012–13–ம் கல்வியாண்டில்
சிவகங்கையிலும், 2013–14–ம் கல்வியாண்டில் திருவண்ணாமலையிலும், இந்த ஆண்டு
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலும் தலா 100 மாணாக்கர்கள்
சேர்க்கையுடன் 3 மருத்துவ கல்லூரிகள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான
அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மேலும், கடந்த 4
ஆண்டுகளில், 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத்துவ
பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவ குழுமத்தின் அனுமதியும்
பெறப்பட்டுள்ளது. இதனால் 2011–12–ம் ஆண்டில் 1,945 ஆக இருந்த மருத்துவ
பட்டப்படிப்பு இடங்கள், 2015–16–ம் ஆண்டில் 2,655 ஆக உயர்ந்துள்ளது. இதன்
மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 710 இடங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
கரூர்–புதுக்கோட்டை
சென்ற ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூரில் 150 மருத்துவ
மாணாக்கர் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்
என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதன் அடிப்படையில் கரூரில்
புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய
கட்டிடம் கட்டுதல் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229
கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு
வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர,
புதுக்கோட்டையில் ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரி 150 மாணாக்கர்
சேர்க்கையுடன் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன் அடிப்படையில்,
புதுக்கோட்டையில் புதியதாக ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான ஒப்புதலை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆயத்த
பணிகளுக்காக ஒரு சிறப்பு அலுவலர், முதல்வர் பணியிடத்தினை உருவாக்கி
முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இம்மருத்துவ கல்லூரி சுமார்
200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








