Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது விண்ணப்பம் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது விண்ணப்பம் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு:
மாற்று திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள், பணியாளர்
ஆகியோர் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.
டிசம்பர் 3–ந் தேதி
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மாற்றுத்
திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு
தமிழக அரசு விருதுகள், டிசம்பர் 3–ந் தேதி மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று
வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில், சிறந்த பணியாளர்/ சுயதொழில்
புரிபவர் (கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர்,
செவித்திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால்
குணமடைந்தோர்) ஆகியோருக்கு 5 விருதுகள் வழங்கப்படும்.
15 விருதுகள்
சிறந்த ஆசிரியருக்கு (பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கு
கற்பித்தல், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும் மன
வளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்தல்) 3 விருதுகள்;
சிறந்த சமூகப்
பணியாளர், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்,
மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் ஆகியோருக்கு
தலா ஒரு விருது;
ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த
ஆசிரியருக்கு (செவித் திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்
மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) 2
விருதுகள்; மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர் மற்றும்
நடத்துனருக்கு 2 விருதுகள் என மொத்தம் 15 விருதுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் இறுதி நாள்
இந்த விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும்
சான்றிதழ் கொண்டதாக இருக்கும். இந்த விருதுகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை,
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை,
கே.கே. நகர், சென்னை–78 என்ற முகவரியில் பெறலாம்.
www.scd.tn.gov.in
என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது அந்தந்த மாவட்ட
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம்
பரிந்துரை பெற்று, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையருக்கு நவம்பர்
12–ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்
அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக்
கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








