Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
மழைக்காலத்தில் மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி சுற்றறிக்கை:
மழைக்காலத்தில் மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி சுற்றறிக்கை:
மழைக்காலத்தில் மாணவர்கள் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வி அதிகாரி சுற்றறிக்கை
அனுப்பி உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மாணவர்கள் பாதுகாப்பு
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி உள்ள நிலையில்
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக, ஆய்வு அலுவலர்களும், பள்ளித்தலைமை
ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அறிவுரைகள்
வழங்கப்படுகின்றன.
பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள்,
திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள்
இருக்கும்பட்சத்தில் அவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்யப்பட
வேண்டும்.
பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள், ஆபத்தான
நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பங்கள், மற்றும் அறுந்து
தொங்கக்கூடிய மின்கம்பிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாக
அப்புறப்படுத்த வேண்டும். பள்ளிக்கு வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும்
ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்போது அவ்வழியினை தவிர்த்திட
வேண்டும்.
தலைமை ஆசிரியர் ஆய்வு
பள்ளியை விட்டு செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும்
மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என்று
அறிவுறுத்த வேண்டும். சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம்
உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும்.
சிதிலமடைந்த
கட்டிடங்கள் மற்றும் சுவர்கள் மற்றும் அறிவியல் ஆய்வு கூடங்கள், கணினி
அறைகளில் அறுந்த அல்லது துண்டித்த நிலையில் உள்ள மின்சார ஒயர்கள்
இல்லாதவாறு தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு, சிக்குன்குனியா
மாணவர்களை கொண்டு மின்சாதனங்கள் இயக்குவதை தவிர்த்தல் வேண்டும்.
பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்கள், வகுப்பறை, கழிவறை மற்றும்
சுற்றுச்சுவர் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பருவகால
மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக
டெங்கு, சிக்குன்குனியா) பாதுகாத்துக்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்க
வேண்டும்.
பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களின் பாதுகாப்பினை
உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால்
மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை,
முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க
வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








