தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அனைத்தும் 24-ந்
தேதியுடன் நிறைவு பெற்றுவிட்டன. பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு
திருத்தங்களைச் செய்ய மொத்தம் 22 லட்சத்து 81 ஆயிரத்து 392 பேர் மனு
கொடுத்துள்ளனர்.
இதில் பெயர் சேர்ப்பு மற்றும் தொகுதி மாறிவிட்டதால் புதிய இடத்தில் பெயர்
சேர்ப்பு ஆகியவற்றுக்காக மட்டும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 98 விண்ணப்பங்கள்
வந்துள்ளன.
பெயர் மற்றும் சில விவரங்களை நீக்குவதற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 920
விண்ணப்பங்களும், திருத்தங்களை மேற்கொள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 227
விண்ணப்பங்களும், தொகுதிக்குள் இடம் மாறியதற்காக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து
136 விண்ணப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.