16 நிபந்தனைகள்
ஐகோர்ட்டு மதுரை கிளையில், எஸ்.எம்.ஆனந்தமுருகன் என்பவர் ஒரு மனுவை கடந்த ஆண்டு தாக்கல் செய்தார். அதில், ‘குற்றப்பின்னணி உள்ளவர்கள், வெளிமாநிலத்தில் சட்டப்படிப்பை முடித்து விட்டு, புனிதமான வக்கீல் தொழிலுக்குள் வருவதை தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மேல் முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய பார் கவுன்சில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் எம்.கே.மிஸ்ரா, இணை தலைவர் எஸ்.பிரபாகரன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இடைக்கால தடை
நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த 16 நிபந்தனைகளில், சில நிபந்தனைகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதிக்கிறோம். அதாவது, மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பை போல், சட்டப்படிப்பையும் 5 ஆண்டு படிப்பாக மாற்ற வேண்டும். இதற்காக 3 ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்ய வேண்டும். தனியார் சட்டக்கல்லூரிகள் மற்றும் சட்டப்படிப்பு இடங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பார் கவுன்சில் தேர்தலில், 20 ஆண்டுகள் வக்கீல் தொழில் செய்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும். அதற்காக வருகிற 2016-ம் ஆண்டு பார் கவுன்சில் தேர்தலை நடத்தக் கூடாது. அதுவரை பார் கவுன்சிலை, நிபுணர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு இடைக்கால தடை விதிக்கின்றோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.








