இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் பொது மேலாளர் கலாவதி கூறியதாவது:
அண்மைக்காலமாக, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் எண்களை ஒரு சிலர் தொடர்பு கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களிடம் அவர்களது பி.எஸ்.என்.எல். இணைய சேவை மாற்றியமைக்கப்படவுள்ளது.
இதற்காக ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் சிலர் எங்களிடம் விளக்கம் கேட்டனர். இதுபோன்று நிர்வாகம் புதிதாக பணம் வசூலிப்பதில்லை. பி.எஸ்.என்.எல் பெயரில் சிலர் மோசடியில் ஈடுபடுவது தெரிகிறது. ஆகையால், யாராவது வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் யாரும் வெளி நபர்கள் கூறுவதை நம்பி பணத்தையோ, இணையத்துக்கான மோடத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார் அவர்.








