விடுமுறை நாட்கள் குறைக்கப்படுவதால், ஆசிரியர்கள், மாணவர்கள் இரு தரப்புமே நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மாணவர்கள் கல்வி கற்பதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இருவருக்கும் ஓய்வு அவசியம்.
இதையெல்லாம் விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து தான், முன்பிலிருந்தே குறிப்பிட்ட நாட்கள் வரை, இடைக்கால மற்றும் கோடை கால விடுமுறை அளிக்கப்படுகிறது.அரசு ஊழியர்களா?ஆசிரியர்கள் தற்போது அரசு ஊழியர்களின் பட்டியலில்சேருகின்றனர்.அவர்களின் விடுமுறையை பறித்து கொள்வதால், எங்களையும், 'நான் வெகேஷனல்' பட்டியலில் சேர்த்து கொள்ளட்டும். ஆண்டுமுழுவதும் நாங்களும் வேலை செய்கிறோம்.மற்றவர்களுக்கு தருவதை போன்று, விடுமுறைகள், இரண்டாவது சனிக்கிழமை
விடுமுறைகள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கொந்தளித்தார்.
சுமையாக கருதாதீர்!
மாநில கல்வித்துறை பொது வழிமுறை கமிஷனர் சத்யமூர்த்தி கூறியதாவது:
முதல் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரை மாற்றப்பட்டுள்ள பாட நடைமுறைகளை ஆய்வு செய்த பின்னரே, பள்ளி வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வித் தரத்தை உயர்த்தவும், கல்வி நடைமுறையை அபிவிருத்தி செய்யவும் இந்த மாற்றத்தை, அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
முந்தைய பாடத்திட்டங்களில் சுற்றுச்சூழல் அறிவியல், கணினி கல்வி, சுற்றுலா போன்றவை கிடையாது. தற்போது பெரும்பாலான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உலகளவிலான போட்டிகளை சமாளிக்க, கர்நாடகா மாணவர்கள், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களை தயாராக்க வேண்டும். இதற்காகவே, பள்ளி வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மொழி அறிவை மட்டும் ஏற்படுத்தினால் போதாது; அவர்களுக்கு பல முக்கியமான விஷயங்களையும் கற்றுத்தர வேண்டும். இதற்காக, ஆசிரியர்கள் தங்களின் நேரத்தை, மாணவர்களுக்காக அதிகம் ஒதுக்க வேண்டியிருக்கும். மாணவர்களுடன் ஆசிரியர்களும் கூட புதிது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும். கற்பிக்கும் பணியை,
ஆசிரியர்கள் சுமையாக கருதக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.








