Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
விமான கட்டணங்களை குறைக்க மத்திய அரசு முடிவு புதிய விமான போக்குவரத்து கொள்கையில் தகவல்:
விமான கட்டணங்களை குறைக்க மத்திய அரசு முடிவு புதிய விமான போக்குவரத்து கொள்கையில் தகவல்:
மத்திய அரசு புதிய விமான போக்குவரத்து கொள்கையை வெளியிட்டுள்ளது. இதில்
சாதாரண மனிதர்களும் விமானத்தில் செல்லக்கூடிய அளவுக்கு கட்டணங்களை குறைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணம்
மத்திய அரசு புதிய விமான போக்குவரத்து வரைவு கொள்கையை நேற்று
வெளியிட்டது. இதில் சாதாரண மனிதர்களும் உள்நாட்டில் விமானத்தில் பயணம்
செய்யக்கூடிய வகையில் கட்டணங்கள் குறைக்கப்படும். சிறிய நகரங்களுக்கும்
விமான போக்குவரத்து தொடங்கும் வகையில் விமான நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை
வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தில் 49 சதவீதமாக
உள்ள அன்னிய நேரடி முதலீடு 50 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
இந்த புதிய
கொள்கையின் முக்கிய நோக்கம், ஒரு மணி நேரம் விமானத்தில் பறப்பதற்கான
கட்டணம் ரூ.2,500–க்கு மேல் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த
வேண்டும். விமான நிறுவனங்கள் ஊக்கத் தொகை மற்றும் இதர பலன்கள் மூலம் இதனை
செய்து காட்ட வேண்டும்.
2 சதவீத வரி
விமான நிறுவனங்கள், விமான நிலைய மேம்பாட்டுதாரர்கள் இந்த
நடவடிக்கையில் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை விமான போக்குவரத்து
அமைச்சகத்துக்கு தெரிவிக்கலாம் என்று விமான போக்குவரத்து மந்திரி அசோக்
கஜபதி ராஜு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதவிர அனைத்து விமான
கட்டணங்களிலும் 2 சதவீதம் வரியாக வசூலிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு
ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருமானம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த
புதிய கொள்கை 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரவும்
மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விமான துறையின் துணை
நிறுவனங்களான விமான நிறுவனங்கள், விமான போக்குவரத்து, உதிரிபாக உற்பத்தி,
திறன்மேம்பாடு, சரக்கு போக்குவரத்து போன்ற அனைத்தும் வளர்ச்சி அடையும்
என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








