தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நலனுக்காகவும், தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற் பயிற்சி நிலையங்கள் அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட மாநிலங் களுக்கிடையிலான ஒப்பு நோக்கு ஆய்வின்படி, தமிழ் நாடு தொழில் உற்பத்தியிலும் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் சிறந்த மாநிலமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, அதிக அளவில் தொழில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவை யினை ஈடு செய்யவும், தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விழை யும் மாணாக்கர்களின் ஆர்வத்தை ஈடுசெய்யும் வகையிலும், நடப்பாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 5 தொழிற் பயிற்சி நிலை யங்கள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவித் தார்.
சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுத்தப்பட உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தொழில் திறன் மிகுந்த தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை.
எனவே சென்னையில் உள்ள டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் சட்ட மன்ற தொகுதியில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் தொடங்குவதற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்த தொழிற் பயிற்சி நிலையம் அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் வட்டம் 40, அருணாசல ஈஸ்வரன் கோவில் தெரு, காமராஜர் சாலையில் தொடங்கப்படும்.
இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்குத் தேவையான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், அனைத்து தளவாடங்கள் வாங்குதல் மற்றும் கட்ட டம் கட்டுதல் போன்ற பல்வேறு இனங்களுக்காக 7 கோடியே 6 ஆயிரம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார்.
அரசின் இந்த நடவடிக் கைகள், “தொலை நோக்குத் திட்டம் 2023”-ல் இலக்கிடப் பட்டுள்ள தொழிற் திறன் மிகுந்த மனித வளம் உருவா வதற்கு வழிவகை செய்யும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.








