சென்னை ஐகோர்ட்டில், பாடம் நாராயணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
படம் பிடிக்கவேண்டும்
தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை ஒழுங்கு விதிகள் கடந்த 2003-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த விதிகளின்படி, மதுபானக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இந்த விதியை தீவிரமாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
விழிப்புணர்வு பலகை
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மதுவிற்பனையில் விதிமுறைகளை முறையாக அமல்படுத்தவேண்டும் என்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகளை மனுதாரர் முன்வைத்துள்ளார். தற்போது, தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது என்பது உண்மை. எனவே, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுவிற்பனை செய்யக்கூடாது.
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுபான விற்பனை கூடங்கள் முன்பு டாஸ்மாக் நிறுவனம் விழிப்புணர்வு விளம்பர பலகைகளை வைக்கவேண்டும். இந்த நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளப்படும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் இந்த ஐகோர்ட்டுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார். இதை பதிவு செய்துக் கொண்டு, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.








