*மூவுலகையும் படைத்து காக்கும் கலைவாணியே! கவிதை புனையும் ஆற்றல் அளிப்பவளே! கலைகளின் தலைவியே!
மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே! குயில் போல இனிய குரல் பெற்றவளே!
நிலவொளி போல ஒளிமுகம் கொண்டவளே! அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவளே!
எங்களுக்கு கல்விச் செல்வத்தை அருள வேண்டும்.
பிரம்மதேவரின் விருப்பத்திற்குஉரியவளே! வேதத்தின் தாயாகத் திகழ்பவளே!
குளிர்ச்சி மிக்க முத்து மாலைஅணிந்தவளே!
அறிஞர்களால் போற்றப்படுபவளே!
மயில் போன்ற சாயல் கொண்டவளே!
சரஸ்வதி தேவியே! உம்மை வணங்குகிறோம்.
*அறியாமை இருளைப் போக்குபவளே!
வேதங்களின் முடிவாகத் திகழ்பவளே!
உண்மை வழி நடப்போரின் உள்ளத்தில் வாழ்பவளே!
மான் போல மருளும் விழிகளைக் கொண்டவளே! வாதிடும் திறமை அளிப்பவளே!
மதிநுட்பம் தருபவளே!
சிந்தைக்கு இனியவளே!
எங்களுக்கு நல்ல புத்தியும், திறமையும் தர வேண்டும்.
* ஸ்படிக மாலை அணிந்தவளே!
ஓலைச் சுவடியைக் கையில் தாங்கியவளே!
அன்னப்பறவை மீது அமர்ந்தவளே!
வீணை இசையில் தேர்ந்தவளே!
புலவர்களின் நாவில் குடியிருப்பவளே!
பாட்டிலும், இசையிலும் விருப்பம் கொண்டவளே!
எங்களுக்கு மதிநுட்பத்தை கொடுத்தருள்வாயாக.








